கழிவறையில் ஆண் பிணம்; பல நாட்களுப்பின் அடையாளம் கண்ட போலீஸ்

கழிவறையில் ஆண் பிணம்; பல நாட்களுப்பின் அடையாளம் கண்ட போலீஸ்
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையம் கம்பன்நகர் கழிப்பிடத்தில் இறந்து கிடந்தவரை பல நாட்களுக்குப்பின் போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர்.

குமாரபாளையம், கம்பன் நகர் நகராட்சி பொதுக்கழிப்பிடத்தில், அப்குதியை சேர்ந்த ஒருவர் கழிப்பிடம் சென்றபோது, அருகில் இருந்த கழிவறையில் துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளார். இது பற்றி குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் தர, நேரில் சென்ற போலீசார் அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டனர்.

ஆனால் இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை செய்ததில் இறந்தவர் குமாரபாளையம் அருகே ஆலங்காட்டுவலசு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்தி,வயது 40, என்பது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

இறந்தவர் கழிவறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்வம் நடந்து பல நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசியுள்ளது. பொதுக்கழிப்பிடம் பராமரிப்பவர்கள் தினமும் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்திருந்தால் ஒரே நாளில் இந்த இறப்பு குறித்து தகவல் கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story