குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் உருவ படத்திற்கு மலரஞ்சலி

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் உருவ படத்திற்கு மலரஞ்சலி
X

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன் மறைவுக்கு மவுன ஊர்வலம் மற்றும் மலரஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் மறைவுக்கு மவுன ஊர்வலம், மலரஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

குமாரபாளையம் நகராட்சியின் முன்னாள் தலைவர் தனசேகரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலமின்றி இறந்தார். இதனையொட்டி குமாரபாளையம் பெரிய மாரியம்மன் நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் ராஜம் தியேட்டர் முன்பிருந்து, புதிய தாலுக்கா அலுவலகம் வரை நடந்தது.

நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்ரமணி உள்ளிட்ட கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்றனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனசேகரன் திருவுருவப்படம் வைக்கப்பட்ட வாகனம் முன்னே செல்ல, அனைவரும் அதனை பின்தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு சென்றனர். தாலுக்கா அலுவலகம் முன்பு உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலை அருகே, தனசேகரனின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனசேகரனின் திருவுருவப்படத்திற்கு அனைவரும் மலர் மாலைகள் அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
Similar Posts
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த  இருவர் கைது
குமாரபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் உருவ படத்திற்கு மலரஞ்சலி
குமாரபாளையத்தில் பட்டதரசியம்மன் அன்னாபிஷேகம்;    108 திருவிளக்கு வழிபாடு
6000ரூ.க்கு 50எம்பி கேமரா, 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி..! யாரு குடுப்பா? இதோ இவங்கதான்..!
சாம்சங் மாதிரியே ஆனா பாதி விலையில் ஃபோன்...! பாவம் சாம்சங்...!
தெய்வ அலங்காரத்தில் குழந்தைகள்   திருவீதி உலா, கோலாட்டம் கோலாகலம்..!
குமாரபாளையம்; கலிக்கம் சித்த வைத்திய முகாம்
ஜிபே, போன்பேவலாம் முடிச்சிவிட்டீங்க போங்க..!  கதற விடும் JioFinance App
அரசு பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை  அறிவிப்பு: ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பு
ஒரே நாளில் 22 திரைப்படங்கள்..! எந்தெந்த ஓடிடியில் என்னென்ன வாங்க தெரிஞ்சிக்குவோம்..!
ரத்தன் டாடா ஏன் உலகப் பணக்காரர்  பட்டியலில் இல்லை?
SPAM கால்களால் எரிச்சலடைகிறீர்களா? ஏர்டெல்லின் சூப்பர் AI ஐடியா!
குமாரபாளையம் சந்தோஷி அம்மன் கோவிலில் நவராத்திரி வழிபாடு   சிறப்பு யாகம்