குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்..!

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்..!
X

குமாரபாளையம் ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்காம் நாள் முகாமில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்காம் நாள் முகாம் நேற்று துவங்கியது.

மக்களுடன் முதல்வர் முகாம்

குமாரபாளையத்தில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் நான்காம் நாள் முகாம் நேற்று துவங்கியது.

மாநிலம் முழுதும் மக்களின் முதல்வர் திட்ட முகாம் துவங்கி நடந்து வருகிறது. குமாரபாளையம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் துவங்கிய நான்காம் நாள் முகாமில், நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, முகாமினை துவக்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, எரிசக்தி துறை மற்றும் மின்சார வாரியம், வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, வீட்டுவசதி துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். திருநங்கைகள் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். தாசில்தார் சண்முகவேல், ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம், ஆர்.ஐ., வி.ஏ.ஒ.க்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

குமாரபாளையம் அம்மன் நகர் சாலை அமைப்பதில் மீண்டும் இழுபறி ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கடந்த 20 ஆண்டுகளாக நாராயண நகர், அம்மன் நகர் பகுதியில் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக, மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்சமயம் இந்த சாலை அமைக்க நகர மன்ற தலைவரால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது.

இருந்தாலும், பொதுப்பணித்துறை இடம் இருந்ததால், நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முழுமையாக சாலை அமைக்க தொடர்ந்து இடையூறாக இருந்ததாக கூறப்பட்டு, இதனால் சாலை குறுகலாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொழிற்சாலைகள் மிகுந்த அந்த பகுதியில், ஓர் இடத்தில் அகலமாகவும், ஒரு இடத்தில் குறுகலாகவும் போட்டால், லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர மிகவும் இடையூறாக இருக்கும். எனவே அனைத்து இடங்களிலும் ஓரே மாதிரியான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!