மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்

மக்கள் நீதி மய்யம் ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்   

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தல் வரவிருப்பதாக தகவல் வெளியாவதையடுத்து, குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு செய்தல், சுதந்திரதினவிழா கொண்டாடுதல், அதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை செயலராக திருச்செங்கோடு செங்கோட்டுவேல், குமாரபாளையம் வேணுகோபால் ஆகியோரது பெயர்களை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. நிர்வாகிகள் நகர செயலர் சரவணன், கோபாலகிருஷ்ணன், நந்தகுமார், மகளிர் அணி சித்ரா, ரேவதி, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!