குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் மின் வாரியத்தில் மனு

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் மின் வாரியத்தில் மனு
X

மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் மின் கம்பத்தை மாற்றியமைக்க மனு கொடுத்த குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் மின்வாரியத்தில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் கலைமகள் வீதி, நகராட்சி ஜே.கே.கே. நடராஜா திருமண மண்டபம் அருகே, காவிரி ஆற்றுக்கு செல்லும் வழி நுழைவுப்பகுதியில் பாதையை அடைக்கும்படி மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியில் பல விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள் உள்ளிட்ட பல தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற்கூடங்களுக்கு நூல்கள் கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை எடுத்து வரவும் டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த மின் கம்பத்தால் காவேரி ஆற்றுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகளிடம், இப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மாநில மகளிரணி தலைவி மூகாம்பிகாவிடம், நகர மகளிரணி நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மூகாம்பிகா அறிவுறுத்தல்படியும், மாவட்ட செயலர் காமராஜ் வழிகாட்டுதல்படியும், நகர மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் ரேவதி, உஷா ஆகியோர் மின்வாரிய உதவி இயக்குனர் சீனிவாசனிடம் இந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க வேண்டி மனு கொடுத்தனர்.

இந்த மனுவை பரிசீலித்து கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சீனிவாசன் தெரிவித்தார்.

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!