குமாரபாளையத்தில் கோம்பு பள்ளம் தூர்வார மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள தூர் வாரப்படவேண்டிய கோம்பு பள்ளம்.
குமாரபாளையத்தில் கோம்பு பள்ளம் தூர் வார மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் பள்ளம் உள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகளிலிருந்து குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேக்கமடையும் நிலை உள்ளது. மேலும் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் உருவாகி, பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியேறும் நிலை உள்ளது.
இதனால் அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி பாம்புகள் நுழைந்து விடுகிறது. நேற்றுமுன்தினம் இதே பகுதியில் உள்ள பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் 12 அடி பாம்பு நுழைந்தது. இதனை தீயணைப்பு படையினர் பிடித்து சென்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்தத்துடன் இருக்கும் நிலை உருவாகி உள்ளது. கழிவுநீர் செல்ல முடியாதபடி, தேங்கும் நிலை உருவாகி வருவதால், துர்நாற்றம் வீசி, பெரும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.
இதனை தவிர்க்க கோம்பு பள்ளம் முழுவதும் தூர் வாரி கழிவுநீர் எளிதில் செல்லவும், துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில், மாவட்ட அமைப்பாளர் சித்ரா, மல்லிகா, ரேவதி, உஷா உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu