குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில்   ஆலோசனை கூட்டம்
X

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்துதல், வார்டு செயலர்கள் நியமனம், வட்ட செயலர்கள் நியமனம், நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாள் கொண்டாடுவது, அனைத்து வார்டுகளிலும் கொடிக்கம்பம் அமைத்தல், கமல் பிறந்த நாளில் அனைத்து வார்டுகளில் கொடியேற்றி அன்னதானம் வழங்குதல், கல்வி உதவி தொகை வழங்குதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல், கொரோனா விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைப்பது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

நிர்வாகிகள் வேணுகோபால், சரவணன், மகளிர் அணி சார்பில் சித்ரா, ரேவதி, உஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி