குமாரபாளையத்தில் நாய்களை பிடிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மனு

குமாரபாளையத்தில் நாய்களை பிடிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மனு
X

மக்கள் நீதி மய்யம் சார்பில் நகராட்சி ஆணையர் சரவணன் வசம் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நாய்களை பிடிக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கத்தாளபேட்டை பகுதியில் வசிப்பவர்கள் விமலா, மாதேஸ்வரன் தம்பதியர். இவரது 2 வயது மகள் ஹரிணியை, அப்பகுதியில் உள்ள நாய் ஒன்று முகம் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துக் குதறியது.

மேலும் நகரில் இதேபோல் வெறி பிடித்த நாய்கள் பல சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் தினமும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவைகளை பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், நகராட்சி ஆணையாளர் சரவணனிடம் புகார் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் விமலா, உஷா, சூர்யா, கார்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!