விளையாட்டு மைதானம் , கல்விக்கடன் ரத்து: அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் மனு

விளையாட்டு மைதானம் , கல்விக்கடன் ரத்து:  அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் மனு
X
குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், கல்விகடன் ரத்து செய்யக்கோரியும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கவும், கல்விகடன் ரத்து செய்யக்கோரியும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டம் பவானி வந்தார். குமாரபாளையத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கக்கோரியும், கல்விகடன் ரத்து செய்யக்கோரியும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வசம் மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு நேரில் கொடுக்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குமாரபாளையம் பகுதியில் உள்ள இளைஞர்கள் பல வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருகின்றனர். இவர்கள் விளையாட்டு பயிற்சி பெற வேண்டுமானால் சேலம் அல்லது ஈரோடுதான் செல்ல வேண்டியுள்ளது. இவர்களுக்கு குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுத்தால், அவர்கள் பயிற்சி பெறவும், பல்வேறு போட்டிகளில் வென்று, நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் உதவியாக இருக்கும். ஆகவே, குமாரபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் மற்றும் போதிய பயிற்சியாளர்கள் அமைத்து தர வேண்டுகிறோம்.

மேலும் எண்ணற்ற மாணவ, மாணவியர் கல்விக்கடன் பெற்று சரியான வேலை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அவர்களின் கல்விக்கடனை ரத்து செய்து உதவிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!