சேதமான சாலைகள் சீரமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் மனு

சேதமான சாலைகள் சீரமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் மனு
X

குமாரபாளையத்தில் சேதமான சாலைகள் சீரமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் சேதமான சாலைகள் சீரமைக்க வேண்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் நகரில் உள்ள 33 வார்டுகளில் பல இடங்களில் சாலைகள் சேதமாகி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீர் படுத்தி பொதுமக்களுக்கு எளிதில் வாகனங்களை ஓட்டி செல்ல உதவிட வேண்டி, நகராட்சி அலுவலக அதிகாரிகள் வசம் மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் நகர அமைப்பாளர் சித்ரா தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் புதுப்பிக்க சேர்மன் விஜய்கண்ணன் நடவடிக்கை எடுத்து வருவதால் விரைவில் சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் விமலா, உஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai in future agriculture