வாக்காளர் சேவை மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!

வாக்காளர் சேவை மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!
X
குமாரபாளையத்தில் வாக்காளர் சேவை மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாக்காளர் சேவை மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

குமாரபாளையத்தில் வாக்காளர் சேவை மையம் அமைக்க மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

குமாரபாளையம் ஆதார் சேவை மையம் இருப்பது போல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகிய இடத்தில் வாக்காளர் சேவை மையம் என்ற ஒரு மையத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தங்கள் வாக்காளர் அட்டை சம்பந்தமான பணிகளை பொதுமக்கள் எளிதாக செய்ய முடியும். குறிப்பிட்ட இரு நாட்கள் மட்டும் அமைத்தால், பலரால் இந்த பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

ஆதார் சேவை மையம் போல் இதற்கும் ஒரு சேவை மையம் இருந்தால், பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!