/* */

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை திறப்பு விழா

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல்   பணிமனை திறப்பு விழா
X

குமாரபாளையத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் மாவட்ட இளைஞர் அணி செயலர் கோபாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் முதற்கட்டமாக 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் சம்பந்தமான பணிகளை கவனிக்க தேர்தல் பணிமனை திறப்பு விழா மாவட்ட செயலர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி செயலர் கோபாலகிருஷ்ணன் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதையடுத்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட பொருளர் நந்தகுமார், மாவட்ட துணை செயலர் சிவகுமார், நகர மகளிரணி நிர்வாகிகள் சித்ரா, உஷா உள்பட பலர் பேசினார்கள். மாவட்ட செயலர் காமராஜ் பேசியதாவது:

33 வார்டுகளிலும் தினமும் அந்தந்த வார்டு கட்சி நிர்வாகிகள் மக்களை சந்தித்து மக்கள் நீதி கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். அந்த பகுதியில் உள்ள மக்கள் குறைகளை கேட்டறிந்து, உடனே நிவர்த்தி செய்து தரப்படும் என உறுதி கூறி, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அந்த குறையை போக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 2 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...