குமாரபாளையத்தில் பராமரிப்பின்றி வீணாகிவரும் அஞ்சல் பெட்டிகள்

குமாரபாளையத்தில் பராமரிப்பின்றி வீணாகிவரும் அஞ்சல் பெட்டிகள்
X

குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அஞ்சல் பெட்டி.

குமாரபாளையத்தில் பராமரிப்பின்றி வீணாகி வரும் அஞ்சல் பெட்டிகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பல இடங்களில் அஞ்சல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகள் போதிய பராமரிப்பின்றி சேதமாகி வருகிறது. இன்றும் போஸ்ட் கார்டு, பதிவு தபால், ஸ்பீடு தபால் ஆகியவற்றில் கடிதங்கள், முக்கிய ஆவணங்கள் அனுப்பும் வழக்கத்தை பலரும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஈ மெயில், மெசேஜ், வாட்ஸாப், போன்ற எண்ணற்ற தகவல் பரிமாற்ற செயலிகள் வந்த நிலையிலும் அஞ்சல் துறை மூலம் தபால் அனுப்பும் முறை மாறாமல் இருந்து வருகிறது. கொரியர் மூலமும் தபால் விநியோகம் செய்து வரும் வேளையில் ஆண் மற்றும் பெண் அஞ்சல் பணியாளர்கள் வீடு வீடாக வந்து தபால் டெலிவரி செய்து வருவதை இன்றும் காண முடிகிறது.

அப்படிப்பட்ட காலத்தால் அழிக்க முடியாத அஞ்சல் துறை சார்பில் தபால்களை போடுவதற்கு வசதியாக பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவைகள் பராமரிக்கப்படுவதில்லை. தூசி படர்ந்தும், பறவையினங்கள் எச்சமிட்டும் காண்போரை முகம் சுளிக்கும் விதமாக இருந்து வருகிறது.

இதில் தபால் போடவே தயக்கம் காட்டும் நிலையில் சுகாதாரமற்று உள்ளது. இவைகளை பராமரிப்பு செய்ய அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story