காந்தி நினைவு நாள் அன்னதானம், உறுதிமொழி ஏற்பு
குமாரபாளையத்தில் காந்தி நினைவு நாளையொட்டி வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடந்தன.
குமாரபாளையத்தில் காந்தி நினைவு நாளையொட்டி அன்னதானம், உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடந்தன.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசு அலுவலகங்களில் தீண்டாமை உறுதிமொழி ஏற்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில், மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தலைமையாசிரியை செல்வி தீண்டாமை உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
மகாத்மா காந்தி சமூக சேவை மையம் சார்பில் காந்தி நினைவு நாளையொட்டி எதிர்மேடு அன்னை ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் காந்தி நாச்சிமுத்து தலைமையில் மூன்று வேளை உணவு கொடுக்கப்பட்டது. அன்னை மைய நிறுவனர் ஹேமமாலினி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu