குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா
X

குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் மகா குண்டம், சிவராத்திரி விழாவையொட்டி நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் பெரியாண்டிச்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் மகா குண்டம், சிவராத்திரி விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், தீக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் அங்காளம்மன், பெரியாயி அம்மன் சிவராத்திரி விழாவையொட்டி பிப். 5ல் பூச்சாட்டுதல் விழாவுடன் துவங்கியது. நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்களுடனும், அலகுகள் குத்தியவாறும் பால் குடங்கள், அக்னி சட்டி, தீர்த்தக்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பெரியாண்டிச்சி அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். நடனமாடியவாறு வந்த குதிரைகள் அனைவரையும் கவர்ந்தது. இன்று காலை 09:00 மணிக்கு மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மாலை 01:00 மணிக்கு மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், இரவு 08:00 மணிக்கு பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு விழா நடைபெற்றது. பிப். 22ல் மாலை 05:00 மணியளவில் மகா குண்டம், பூ மிதித்தல், பிப். 23ல் முப்பூஜை நடைபெறவுள்ளது.

குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு காளியம்மன் திருவிழாவையொட்டி நேற்று பூச்சாட்டு விழா நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

பிப். 14ல் பூச்சாட்டு நடைபெற்றது. பிப். 21ல் மறு பூச்சாட்டு, கிராம சாந்தி செய்தல், பிப். 22 கொடியேற்று விழா, பிப். 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், தேர்க்கலசம் வைத்தல், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மன் திருக்கல்யாணம், மகா தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, மார்ச். 3ல் தேர் நிலை அடைதல், வாண வேடிக்கை காட்சி விழா, அம்மன் அலங்கார திருவீதி உலா, மார்ச். 4ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, மார்ச். 5ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

இதே போல் குமாரபாளையம் அருகே கள்ளிபாளையம் சக்தி காளியம்மன், சக்தி மாரியம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பூ மிதித்தல் விழாவையொட்டி நேற்று பூச்சாட்டு விழா நடைபெற்றது. பிப். 21ல் மறு பூச்சாட்டு, மாரியம்மனுக்கு கம்பம் நடுதல், 28ல் அம்மனுக்கு புனித நீர் அபிஷேகம், அம்மன் சக்தி அழைத்தல், மார்ச். 1ல் மகா குண்டம், பூ மிதித்தல், பொங்கல் ஆராதனை, மார்ச். 2ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் காளிமுத்து, நிர்வாகிகள் சுப்ரமணி, நந்தகுமார், சண்முகம், கிருஷ்ணராஜ், தங்கராசு மற்றும் குண்டம் பராமரிப்பு குழுவினர் செய்து வருகின்றனர். பிப். 28, மார்ச். 1, மார்ச். 2 ஆகிய 3 நாட்களும் பக்தர்களுக்கு மூன்று வேளைகளும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

Tags

Next Story
வளர்ந்து வரும் மருத்துவத்தில் AI யின் புதிய வெற்றிகள்!