/* */

சாய ஆலையில் மரம் வெட்டும் தொழிலாளி பலி

சாய ஆலையில் புகை போக்கி உடைந்து விழுந்த சம்பவத்தில் மரம் வெட்டும் தொழிலாளி பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

சாய ஆலையில்  மரம் வெட்டும் தொழிலாளி பலி
X

பலியான மாரியப்பன்.

சேலம் மாவட்டம், தேவூர் அருகே செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50, மரம் வெட்டும் தொழிலாளி. இவர் டிராக்டர் உதவியுடன் பெரிய மரங்களை வெட்டி கொடுக்கும் பணியை பல சாயப்பட்டறைகளுக்கு செய்து கொடுத்து வந்தார். நேற்று குமாரபாளையம் பவர் ஹவுஸ் எதிரில், ராயல் ப்ராசஸ் எனும் சாய ஆலையில் டிராக்டர் உதவியுடன் மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாங்காமல் அங்கிருந்த உயரமான புகை போக்கி உடைந்து, மாரியப்பன் தலைமேல் விழுந்தது. இதனால் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் இவர் பலியானார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 March 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...