குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் பேச்சு வார்த்தை
X

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிழரசி தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

குமாரபாளையம் அருகே சங்ககிரி சங்கர் சிமெண்ட் ஆலை உள்ளது. இதில் சிமெண்ட் லோடு எடுத்துக்கொண்டிருந்த ஒப்பந்ததாரர் உடல்நிலை சரியில்லாததால் சிமெண்ட் லோடு எடுக்க வரவில்லை என்று சிமெண்ட் நிர்வாகத்திடம் கூறியதாகத் தெரிகிறது.

இதனால் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்திடம் இந்த லாரிக்கு பதிலாக வேறு லாரி அனுப்பி வைக்க வேண்டி சங்கர் சிமெண்ட் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இது சம்பந்தமாக தாசில்தார் தமிழரசி தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் திருச்செங்கோடு டி.எஸ்.பி. சீனிவாசன், சங்கர் சிமெண்ட் நிர்வாக துணைத் தலைவர் வீரபாகு, இணைத் தலைவர் பழனியப்பன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலர் நடேசன், வெப்படை எஸ்.ஐ. வெற்றிவேல், ஆர்.ஐ. விஜய் உள்படப் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story