குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநர் தலைமறைவு: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநர் தலைமறைவு: போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த லாரி ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் பூசாரிக்காடு பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார், 29. லாரி ஓட்டுனர். இவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்து, எஸ்.ஐ. மலர்விழி மற்றும் போலீசார் மாலை 04:00 மணியளவில் நேரில் சென்றனர்.

போலீசார் வருவதையறிந்ததும் அவர் தலைமறைவானார். அவரது வீட்டில் போலீசார் தேடியதில் குளியல் அறையில் 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
சேந்தமங்கலத்தில் அதிர்ச்சி..! மின் மோட்டார் கம்பி திருட்டு சம்பவம்  போலீசாரின் விசாரணை..!