குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதல்: ஒருவர் கவலைக்கிடம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதல்: ஒருவர் கவலைக்கிடம்
X

பைல் படம்.

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் வசிப்பவர் தினேஷ்குமார், 35. டிரைவர். இவர் தனது பேசன்புரோ டூவீலரில் நேற்றுமுன்தினம் இரவு 11:45 மணியளவில் சங்ககிரியில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வேகமாக வந்த அசோக் லைலேன்ட் லாரி இவர் வந்த டூவீலர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் காமராஜ், 25, என்பவரை பிடித்து, வழக்குபதிவு செய்து குமாரபாளையம் எஸ்.எஸ்.ஐ. தன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology