குமாரபாளையத்தில் பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையத்தில் பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு
X

போக்குவரத்து பாதிப்புக்கு காரணமான பழுதான லாரி. 

குமாரபாளையத்தில், பழுதான லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று இரவு 09:00 மணியளவில் சிமெண்ட் அட்டைகள் ஏற்றி வந்த லாரி ஒன்று வளைவில் திரும்பியது. அப்போது பாரம் தாங்காமல் லாரியின் ராடு ஒன்று துண்டானது. இதனால் லாரி மேலும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

குமாரபாளைய பஸ் ஸ்டாண்ட், சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் செல்லும் வாகனங்களும், இடைப்பாடி சாலையில் இருந்து, குமாரபாளையம் சேலம் சாலை மற்றும் நகர் பகுதியில் நுழையும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த எஸ்.ஐ. சிவகுமார் உள்ளிட்ட போலீசார் ஜே.சி.பி. யை வரவழைத்து லாரியை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர், வாகன போக்குவரத்து சீரானது.

Tags

Next Story
ai marketing future