லாரி மோதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை

லாரி மோதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை
X
குமாரபாளையத்தில், லாரி மோதியதில், உயிருக்கு ஆபத்தான நிலையில், கூலித்தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குமாரபாளையம் கோட்டைமேடு பகுதியில் வசிப்பவர் பெருமாள், 47. கூலித்தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10:15 மணியளவில், சேலம் - கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.

அப்போது பாரத் பென்ஸ் லாரி, இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக, ஈரோடு தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து லாரி ஓட்டுனர் ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவை சேர்ந்த பாலாஜி, 45, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!