/* */

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்!

கொரோனா விதிமுறைகளை மீறி இயங்கியதாக, பள்ளிபாளையத்தில், ஜவுளிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் அனுமதியின்றி இயங்கிய ஜவுளிக்கடைக்கு அதிகாரிகள் சீல்!
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப்பகுதி அருகே, ஜவுளிக்கடை உள்ளது. கொரோனா ஊரடங்கால் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜவுளிக்கடையில் முன்பக்கம் கதவை பூட்டிக்கொண்டு, பின்பக்க கதவு வழியே ஏராளமான ஊழியர்களுடன் இயங்கி வருவதாக, பள்ளிபாளையம் நகராட்சிக்கு புகார் சென்றது.

இதையடுத்து, அங்கு விரைந்த நகராட்சி அதிகாரிகள், தமிழக அரசின் விதியை மீறி, ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் இல்லாத ஜவுளிக்கடை இயங்குவதை கண்டறிந்தனர். ஜவுளிக்கடையில் இருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, கடைக்கு பூட்டு போடப்பட்டது.

மேலும், கடை உரிமையாளருக்கு ஊரடங்கு காலத்தில் இதுபோன்று கடைகளை திறந்து வைப்பது சட்டவிரோதமான செயல் என அறிவுரைகளை வழங்கி சென்றனர். இதனால் பள்ளிபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 10 Jun 2021 3:15 PM GMT

Related News