டெம்போவில் குப்பை கழிவுகளை கொட்ட வந்த நபர்கள்: சிறைபிடித்த பொதுமக்கள்

டெம்போவில் குப்பை கழிவுகளை கொட்ட வந்த நபர்கள்: சிறைபிடித்த பொதுமக்கள்
X

சவுதாபுரம் பகுதியில் குப்பை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளை கொட்டும் போது அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

குமாரபாளையம் அருகே டெம்போவில் குப்பை கழிவுகளை கொட்ட வந்த நபர்களை ஊராட்சி துணை தலைவர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

குமாரபாளையம் அருகே சவுதாபுரம் பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் இறைச்சி கழிவுகள், பழைய இரும்பு கழிவுகள், குப்பை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகளை கொட்டி வந்தனர்.

நேற்று இரவு 08:30 மணியளவில் டெம்போவில் கொண்டுவந்த கழிவு மூட்டைகளை கொட்டும் போது, ஊராட்சி துணை தலைவர் சுதா லோகநாதன் மற்றும் பொதுமக்கள் அவர்களை சிறை பிடித்தனர். இது குறித்து வெப்படை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இந்த வண்டியில் வந்த சில நபர்களையும் சிறை பிடித்தனர்.

Tags

Next Story
ai healthcare products