முழுமுடக்கம்: இறைச்சி வியாபாரிகள் அதிருப்தி

முழுமுடக்கம்: இறைச்சி வியாபாரிகள்   அதிருப்தி
X

முழு ஊரடங்கு காரணமாக  குமாரபாளையத்தில் மூடப்பட்டுள்ள இறைச்சிக் கடைகள்



முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக குமாரபாளையம் இறைச்சி வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்

முழு ஊரடங்கால் கடைகளை திறக்க முடியாமல் போனதால் தொடர் வருவாய் இழப்பைச்சந்தித்து வருவதாக குமாரபாளையம் இறைச்சி கடையினர் அதிருப்தி தெரிவித்தனர்.

இது பற்றி குமாரபாளையத்தைச் சேர்ந்த இறைச்சி கடை வியாபாரிகள் கூறியதாவது: ஜன. 13 முதல் போகி, பொங்கல் பண்டிகை, சனி பிரதோஷம், ஜன. 18ல் தை பூசம் என விழா நாள்கள் வரிசைகட்டி வந்தன. மேலும் குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற சவுண்டம்மன் திருவிழாவும் இதே சமயத்தில் நடைபெற்றது. இதனால் அசைவம் தவிர்க்கப்பட்டு சைவம்தான் முன்னிலையில் இருந்தது. ஆகவே, இறைச்சி விற்பனை என்பதே இல்லாத நிலை ஏற்பட்டது. அனைத்து விசேஷநாள்களும் முடிவுற்ற நிலையில், இந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லாமல் இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதனால் 200க்கும் மேற்பட்ட இறைச்சி விற்பனை கடையினர் வாழ்வாதரம் இழந்து தவித்ததாகவும் தெரிவித்தனர்.



Tags

Next Story
ai and business intelligence