ராமர் கோவிலில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஒளி பரப்பு..!
குமாரபாளையம் ராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
ராமர் கோவிலில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஒளி பரப்பு
குமாரபாளையம் ராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
குமாரபாளையம் ராமர் கோவிலில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சி ஆன்மீகவாதி ஓம் சரவணா ஏற்பாட்டின் பேரில் பக்தர்களுக்காக பெரிய அளவிலான டி.வி. வைத்து ஒளிபரப்பப்பட்டது. இதில் இப்பகுதி மற்றும் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, ராமர் புகழ் பாடியவாறு, கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர். ராமர் கோவிலில் உள்ள ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சேநேயர், கணபதி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் மற்றும் அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெற்றது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார்.
குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்தன. மட்டுமல்லாது கும்பாபிஷேக விழாவை நேரலையில் காண பாஜக ஆளும் மாநிலங்களில், பல்வேறு கோயில்களிலும் எல்இடி திரை வைக்கப்பட்டது.
கோயிலின் கட்டுமான பணிகள் முழுமை பெறாததற்கு முன்னரே கும்பாபிஷேக விழா நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இதற்கு கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா விளக்கமளித்திருக்கிறார். அதாவது, "கோயிலின் கும்பாபிஷேக விழா நிறைவடைந்த மறுநாளே கட்டுமான பணிகள் தொடங்கப்படும். அயோத்தி கோயில் வளாகத்தில் மேலும் 7 கோயில்கள் கட்டப்பட உள்ளன. இந்த ஆண்டே முழு கோயிலையும் கட்டி முடிக்கும் உற்சாகத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu