குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மதுவிற்ற நபர் கைது

குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல்  மதுவிற்ற நபர் கைது
X
குமாரபாளையத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையத்தில், பழைய முருகன் தியேட்டர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்பதாக தகவல் கிடைத்து, குமாரபாளையம் போலீசார் எஸ்.ஐ. நந்தகுமார் தலைமையில், அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு காவேரி நகரை சேர்ந்த கந்தசாமி, 42, அனுமதி இல்லாமல் அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டிருந்தார்.

அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடமிருந்த 14 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!