லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்

லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
X
குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

குமாரபாளையத்தில் தளபதி லயன்ஸ் சங்கம், டெக்ஸ்சிட்டி லயன்ஸ் சங்கம், மல்லசமுத்திரம் லயன்ஸ் சங்கம் ஆகிய லயன்ஸ் சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆளுநரின் முதலாவது ஆலோசனை கூட்டம் மற்றும் வட்டாரம் 23ன் கூட்டுக்கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் தனபால், தளபதி லயன்ஸ் சங்க பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் பங்கேற்று மூன்று சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மூன்று சங்க நிர்வாகிகள் தங்கள் சங்கங்களின் சேவைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தனர். சிறப்பாக சேவை செய்த சங்க நிர்வாகிகளுக்கு கூட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பரிசுகள் வழங்கினார். இதில் முதலாம் துணை மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன், முன்னாள் மாவட்ட ஆளுநர் மோகன், பசிப்பிணி தலைவர் சண்முகசுந்தரம், சங்க நிர்வாகிகள் கதிர்வேல், மோகன், சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் லயன்ஸ் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Tags

Next Story