அ.தி.மு.க.வை பலப்படுத்துவோம் என சசிகலா பேச்சு

அ.தி.மு.க.வை பலப்படுத்துவோம் என   சசிகலா பேச்சு
X

வேனில் இருந்தபடியே சசிகலா பேசினார்.

ADMK News Tamil-அ.தி.மு.க.வை பலப்படுத்துவோம் என சசிகலா பள்ளிபாளையத்தில் பேசினார்.

ADMK News Tamil-சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த சசிகலாவிற்கு சசிகலா பேரவை மாநில செயலர் ஆறுமுகம் தலைமையில் பள்ளிபாளையத்தில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் சசிகலா வேனில் இருந்தபடி பேசினார்.

அவர் பேசுகையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து எந்த நல்ல திட்டங்களும் மக்களுக்கு செய்யவில்லை. இதை செய்வேன், அதை செய்வேன் என மேடைக்கு மேடை பேசி பலனில்லை. மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று அடையவில்லை. அவர்கள் ஆட்சியில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு போன்றவைதான் தர முடிந்தது. ஊடகங்களில், செய்தி தாள்களில் போதைப்பொருள் விற்பனை, திருட்டு போன்றவை நடபதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. தி.மு.க. ஆட்சியில் இது போன்ற செய்திகள்தான் வரும். நமது புரட்சி தலைவரும், புரட்சி தலைவியும் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்துள்ளனர். அதை மக்கள் மறக்க மாட்டார்கள். தி.மு.க.வினர் அ.தி.மு.கவினரை அளிக்க சூழ்ச்சி செய்து வருகிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தி.மு.க.வை விரட்டுவோம். அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை பலமான கட்சியாக ஆட்சியில் அமைக்கும் வரை ஓய மாட்டேன். மக்கள் விரோத தி.மு.க.வை எதிர்ப்பது தான் நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!