குமாரபாளையம் பகுதி க்ரைம் செய்திகள்…
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:
கட்டிடத் தொழிலாளி கைது:
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள சாலோயர தடுப்பு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. அதற்காக பேருந்து நிலைய வளாகத்தில் என். சாண்ட் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சுவர் பணி நிறைவு பெற்றதும் எம் .சாண்ட் மீதமானதால் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து இருந்தது.
ஏற்கெனவே பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி தினசரி மார்க்கெட் ஆக மாற்றிய பின்பு, ஒரு பக்கம் உள்ள பகுதியில் மட்டுமே, அனைத்து பேருந்துகள், பள்ளி வாகனங்கள், தனியார் நிறுவன பேருந்துகள், வேன்கள் என அதிக வாகனங்கள் வந்து செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில், பேருந்து நிலைய வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள எம். சாண்ட்டை கட்டிடத் தொழிலாளி ஒருவர், சாக்கு பையில் திருடி சென்றுள்ளார். தொடர்ந்து வேறு யாரேனும் திருடிச் செல்லாமல் தடுக்கும் வகையில், மீதமுள்ள எம்.சாண்டை உடனடியாக அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செல் போன்கள் திருடியவர் கைது:
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பேக்கரி கடை வைத்து தொழில் செய்து வருபவர் மோகன். இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி விட்டு, நேற்று காலை 6 மணிக்கு கடையை திறந்த போது, கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு கல்லா பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதேபோல் பேக்கரி எதிரில் சித்திரைவேல் என்பரவருக்கு சொந்தமான ஹோட்டலிலும் மேற்கூரை பிரிக்கப்பட்டு கல்லாப் பெட்டியில் வைத்து சென்ற பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இரு கடையின் உரிமையாளார்களும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் மலர்விழி மற்றும் போலீஸார் குமாரபாளையம் போலீஸார், காவேரிநகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் பழனி பகுதியை சேர்ந்த மகுடீஸ்வரன் (வயது 35) என்பது தெரியவந்தது. குமாரபாளையத்தில் இரண்டு கடைகளிலும் நிகழ்ந்த திருட்டு சம்பவத்தில் மகுடீஸ்வரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மகுடீஸ்வரனை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து திருடப்பட்ட பணம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகையிலைப் பொருட்கள் விற்ற 3 பேர் கைது:
குமாரபாளையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீஸார் ரோந்து பணி மேற்கொண்டனர். விட்டலபுரி, அம்மன் நகர், வட்டமலை பகுதிகளில் சரவணன் (வயது 39), பிரபாகரன் (34), தங்கமணி (53), ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீஸார் மூன்று பேரிடம் இருந்தும் 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கட்டிட தொழிலாளி பலி:
பள்ளிபாளையம் பெரியகாடு பகுதியயை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி தங்கவேல் (வயது 58). இவர், கடந்த மாதம் 21 ஆம் தேதி குமாரபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.
இதையெடுத்து, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கவேல் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu