குமாரபாளையம் சாலைகளில் எல்.இ.டி. விளக்குகள்: அளவீடு பணிகள் துவக்கம்
குமாரபாளையம்- பள்ளிபாளையம் சாலையில் எல்.ஈ.டி. விளக்குகள் அமைக்க இடம் அளவீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஸ்டான்லிபாபு கூறுைகயில், குமாரபாளையம் நகராட்சி சாலை பாதுகாப்பு பணிக்காக மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்.ஈ.டி. விளக்குகள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பத்திற்கு 2 எல்.இ.டி. விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்.இ.டி. என மொத்தம் 129 விளக்குகள் புதிதாக அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, குமாரபாளையம் ராஜம் தியேட்டர் முதல் பள்ளிபாளையம் பிரிவு வரையில் சேலம் சாலையில் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க துளைபோடும் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று பள்ளிபாளையம் சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே எல்.இ.டி. விளக்குகள் அமைக்க இடம் அளவீடு செய்யப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu