குமாரபாளையம் சாலைகளில் எல்இடி விளக்குக் கம்பங்கள்: நிறைவு கட்டத்தில் பணிகள்

குமாரபாளையம் ராஜம் தியேட்டர் முதல் காவல் நிலையம் வரை சேலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள எல்இடி விளக்குக் கம்பங்கள்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஸ்டான்லிபாபு கூறுகையில், குமாரபாளையம் நகராட்சி சாலை பாதுகாப்பு பணிக்காக 2 கோடி நிதி, மாவட்ட கலெக்டர் உத்திரவுப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாரச்சந்தை முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையிலான சாலை, ஐயன் தோட்டம் சாலை, அம்மா உணவகம் சாலை ஆகிய 3 சாலைகளும், புதிய தார் சாலையாக மாற்றப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெறப்பட்டு, சேலம் சாலை, பள்ளிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் எல்இடி விளக்குக் கம்பங்கள் டிவைடர்கள் இடையில் நிறுவப்பட்டு ஒரு கம்பத்திற்கு 2 எல்இடி விளக்குகளும், சில இடங்களில் ஒரு கம்பத்திற்கு ஒரு எல்இடி விளக்கும் ஆக 129 விளக்குகள் புதிதாக அமைக்கும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu