குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் 3 நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
X
வழக்கறிஞர்களின் போராட்டத்தால் குமாரபாளையத்தில் கோர்ட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
By - K.S.Balakumaran, Reporter |22 Aug 2022 4:31 PM IST
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு 3 நாட்கள் போராட்டம் துவங்கியது.
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றபுறக்கணிப்பு 3 நாட்கள் போராட்டம் நேற்று துவங்கியது. இது பற்றி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் கூறும்போது குற்றவியல் நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் அத்து மீறலை கண்டித்து ஆகஸ்டு22,23,24 ஆகிய 3 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த போராட்டம் துவங்கியது. 24ம் தேதி வரை இது நீடிக்கும்.நாமக்கல் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் புறக்கணிப்பு நடைபெறவுள்ளது. குமாரபாளையத்தில் 3 நாட்கள் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu