குமாரபாளையத்தில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
குமாரபாளையத்தில் 3வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர். ( மாதிரி படம்)
3வது நாளாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3வது நாளாக நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய ஜாஜி சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை சமஸ்கிருத்தம் நுழைத்து திருத்தி உள்ளனர். இதன் ஷரத்துகள் மக்கள் விரோதமாக இருப்பதால், இதனை திரும்ப பெறக்கோரி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுமுன்தினம் 2வது நாளாக நடத்தினர்.
இந்நிலையில் பரமத்தி வழக்கறிஞர் பாலகுமாரை தீண்டாமை ஒழிப்பு சட்ட பிரிவு கீழ் கைது செய்த பரமத்தி வேலூர் போலீசாரை கண்டித்தும், ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரை கட்டி வைத்து தாக்கியதை கண்டித்தும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் வேண்டி, குமாரபாளையம் வழக்கறிஞர்கள் 3வது நாளாக சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.
வழக்கறிஞர்கள் சங்க செயலர் நடராஜன் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் துணை தலைவர் தீனதயாளன், துணை செயலர் ஐயப்பன், சங்க பொருளர் நாகப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu