குமாரபாளையத்தில் பெரிய ரவுடியாக சதித் திட்டம்: 5 கொலை குற்றவாளிகள் கைது

குமாரபாளையத்தில் பெரிய ரவுடியாக சதித்  திட்டம்: 5 கொலை குற்றவாளிகள் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் பெரிய ரவுடியாக சதித் திட்டம் தீட்டியதாக 5 கொலை குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் அருகே முன்னாள் கொலை குற்றவாளிகள் 5 பேர் சதி திட்டம் தீட்டிக்கொண்டிருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேற்று காலை 7:30 மணியளவில் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் குமாரபாளையம் காவேரி நகரை சேர்ந்த பாபு, 34, கலைமகள் வீதி, இந்திரா நகர் கோபிநாத், 27, காவேரி நகர் புதுப்பாலம் அருகே வசிக்கும் மதிவாணன், 36, வட்டமலை செந்தில் (எ) மிரண்டா செந்தில்,35, கத்தாளபேட்டை நந்தகுமார், 43, என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஒன்று சேர்ந்து, ''நாம் ஏற்கனவே கொலை குற்றங்கள் செய்த போது, நம் மீது பொதுமக்களுக்கு பயம் இருந்தது. தற்போது அந்த பயம் இல்லை. பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் பயம் ஏற்படுத்தும் வகையிலும், நாம் ஒன்று சேர்ந்து ஏதாவது பொது சொத்திற்கு சேதம் ஏற்படுத்தினால்தான் தங்களை பெரிய ரவுடிகள் என நினைத்து பயம் வரும்'' என சம்பவ இடத்தில் திட்டம் தீட்டிக்கொண்டு இருந்தார்கள் என தெரிவித்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்