குமாரபாளையத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு
குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா நடைபெற்றது.
குமாரபாளையத்தில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் திறப்பு விழா துணை செயலர் ரவி தலைமையில் நடைபெற்றது. மொழிப்போர் தியாகி வடிவேல் நினைவுத் தூணை திறந்து வைத்தார். எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் மதிவாணன், எஸ்.எஸ்.எம்.பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் இளங்கோ, நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வம், பவானி தி.மு.க. நகர செயலர் நாகராஜன், மூத்த வக்கீல் மோகன், சிறு சாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் உள்பட பலரும் பங்கேற்று நினைவுத் தூணிற்கு மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தினர். மொழிப்போர் தியாகிகளின் மனைவிகள், வாரிசுகள் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு கவுரப்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தலைவர் மல்லை ராமநாதன் தலைமை வகிக்க, பி.யூ.சி.எல். தமிழ்நாடு, புதுவை தலைவர் குறிஞ்சி, எழுத்தாளர் பாலமுருகன், உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
1965ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப் போரில் குமாரபாளையத்தில் 15 பேர் பலியாகினர். இவர்களது நினைவாக இந்த நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அமைப்புக்குழுவினர் பகலவன், ஆறுமுகம், அன்பழகன், விடியல் பிரகாஷ், சரவணன், செல்வராசு, பாண்டியன், கதிரவன், புவனேஸ்வரன், சாமிநாதன், உள்பட பலர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu