உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி நிலம் அளந்து கொடுக்கும் பணி

உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி நிலம் அளந்து கொடுக்கும் பணி
X

பள்ளிபாளையம் அருகே உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி நிலம் அளந்து கொடுக்கும் பணி நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். 

பள்ளிபாளையம் அருகே உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி நிலம் அளந்து கொடுக்கும் பணி நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே சவுதாபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி, 54. இவருக்கும் பிள்ளையார்காட்டூர் பகுதியை சேர்ந்த மாரப்பன் வகையராவிற்கும் இடம் பிரிப்பதில் பிரச்சனை எழுந்துள்ளது. இதில் பொன்னுசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்திரவுப்படி 2.35 ஏக்கர் நிலத்தை அளந்து மீட்டு கொடுக்கும்படி தீர்ப்பானது. இதனால் பொன்னுசாமி குமாரபாளையம் தாசில்தார் தமிழரசியிடம் மனு கொடுத்தார். இது சம்பந்தமாக பள்ளிபாளையம் போலீசில் தாசில்தார் தமிழரசி பாதுகாப்பு கேட்டு புகார் அளித்தார்.

இதுகுறித்து திருச்செங்கோடு கூடுதல் டி.எஸ்.பி. செல்லபாண்டியன், குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லட்சுமணகுமார், இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் எளச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் குணசேகரன், திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மற்றும் போலீசார் நேரில் சென்று பாதுகாப்பு வழங்கினர். தாசில்தார் தமிழரசி தலைமையில் பொன்னுசாமிக்கு இடம் அளந்து கொடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!