பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு கண்டித்து நில முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நில முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் அரசின் அதிக வருவாய் கொண்ட துறைகளில் முக்கிய பங்காக விளங்குவது பத்திரப்பதிவுத்துறை. இந்த பத்திர பதிவு துறையில் வீடு, காலி மனை மற்றும் விவசாய நிலங்கள் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்வதன் மூலம் பல்வேறு வகைகளில் அதிக வருவாய் ஈட்டும் துறையாக விளங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்தி 3 மடங்கு காலி மனை, நிலங்களின் தன்மையின் அடிப்படையில் கட்டண உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டி மதிப்பு உயர்வின் காரணமாக காலிமனை மற்றும் வீடு வாங்குவோர் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளதாக கூறி குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலை சந்திப்பில், குமாரபாளையம் தாலுகா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் சின்னசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வழிகாட்டி மதிப்பை காட்டி, தற்பொழுது 100% கட்டண வசூல் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அடமான கடன் பெறுவதற்கான பதிவு கட்டணம் 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பத்திர பதிவுத்துறையில் பதிவு செய்யும் ஆவணங்களின் எண்ணிக்கைக்கு பக்கம் ஒன்றுக்கு இதுவரை 15 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்ததை 100 ரூபாய் உயர்த்தியது உள்ளிட்டவை பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.
ஏற்கனவே பத்திரப்பதிவு துறையில் பல்வேறு விதிமுறைகளின் காரணமாக பத்திரம் பதிவு செய்யும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது தற்பொழுது பெரும் ஏமாற்றத்தை பொது மக்களுக்கு அளித்துள்ளதால் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு பத்திரப்பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu