குமாரபாளையத்தில் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட வழிகாட்டி போர்டு

குமாரபாளையத்தில் 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட  வழிகாட்டி போர்டு
X

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை எம்.எல்.ஏ. அலுவலகம் பகுதியில் வழிகாட்டி போர்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குமாரபாளையத்தில் வழிகாட்டி போர்டு 2 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அருகே பள்ளிபாளையம் சாலை எம்.எல்.ஏ. அலுவலகம் பகுதியில் புதிய தார் சாலை போடப்பட்டது. அப்போது பணிக்கு இடையூறாக இருப்பதால், அங்கிருந்த வழிகாட்டி போர்டு அகற்றப்பட்டு, எம்.எல்.ஏ. அலுவலகம் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டது. இது 2 மாதங்களாக அங்கேயே கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினார்கள். 4 சாலைகள் சந்திப்பில் பலருக்கும் பயன்படும் வழிகாட்டி போர்டை உடனே நிறுவ நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
சேந்தமங்கலத்தில் அதிர்ச்சி..! மின் மோட்டார் கம்பி திருட்டு சம்பவம்  போலீசாரின் விசாரணை..!