தூய்மை பணியில் தொய்வு: தூய்மை பணியாளர்களுக்கு சேர்மன் அறிவுரை

தூய்மை பணியில் தொய்வு: தூய்மை பணியாளர்களுக்கு சேர்மன் அறிவுரை
X

குமாரபாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சேர்மன் விஜய்கண்ணன் அறிவுரை வழங்கினார்.

குமாரபாளையத்தில் தூய்மை பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை, 60 ஆயிரத்திற்கும் மேலான வீடுகள், கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். குப்பைகள் வீடு, வீடாக சேகரிப்பது, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை சேகரிப்பது, ஓட்டல் கடைகளில் கழிவுகள் சேகரிப்பது, வடிகால் அடைப்பை நீக்கி, கழிவுநீர் எளிதில் செல்லும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.

இருப்பினும் எங்கள் வார்டில் குப்பை எடுப்பதில்லை, எங்கள் வார்டில் வடிகால் அடைப்பை நீக்குவது இல்லை என நாளுக்கு நாள் புகார் அதிகரித்து வருகிறது. கடந்த மாத நகரமன்ற கூட்டத்தில் இது குறித்து அனைத்து வார்டு கவுன்சிலர்கள் புகார் கூறினார்கள். அதனால் தூய்மை பணியாளர்களின் மேஸ்திரிகளை கூட்ட அரங்கில் வரவழைத்து, குப்பை அகற்றப்படுவது இல்லை என அனைத்து கவுன்சிலர்களும் புகார் தெரிவித்துள்ளனர். இனி இவ்வாறு புகார் வராத வகையில் பணியாற்ற வேண்டும் என சேர்மன் எச்சரித்து அனுப்பினார்.

நேற்று பல பகுதி பொதுமக்கள் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் வசம் தூய்மை பணிகள் சரிவர செய்வது இல்லை, இதனால் கொசு உற்பத்தி அதிகம் ஆகி, பல நோய்கள் உருவாக காரணம் ஆகின்றது. துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது என்று புகார் கூறினார்கள்.

இதனால் அனைத்து வார்டு தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சேர்மன் விஜய்கண்ணன் பேசினார். இவர் பேசியதாவது:

நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் குப்பை அகற்றுவது இல்லை என தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பலமுறை சொல்லியும் இதே புகார் வந்து கொண்டு உள்ளது. நீங்கள் உங்கள் பணியை சரிவர செய்தால்தான், நான் நல்ல பெயர் வாங்க முடியும். உங்கள் பணிகளை நிறைவாக செய்து எனக்கு நல்ல பெயர் பெற்று தாருங்கள். விரைவில் அதிக ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கபடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture