பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பெண் தர்ணா: சமாதானம் செய்த போலீசார்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பெண் தர்ணா: சமாதானம் செய்த போலீசார்
X

பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை, சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பெண் ஒருவர், பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் தகராறு செய்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவிதா, வயது 35 (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). மனநலம் பாதிக்கபட்டவர் என்று கூறப்படுகிறது. இவர், இன்று காலை பள்ளிபாளையம் காவல் நிலையம் முன்பு நின்று கொண்டு,காவல் அதிகாரிகளுடன் முண்ணுக்கு பின் முரணாக பேசிக்கொண்டிருந்தார்.

அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரிகள், அந்தப் பெண்ணை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பலமுறை காவல் நிலையம் வந்தும் தனது பிரச்சனை தீர்க்கப்படவில்லை என கூறி அங்கிருந்த காவலர்களிடம் அந்தப் பெண் வாக்குவாதம் செய்தார். காவலர்கள், உங்களுடைய கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் என கூறி அப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனால் கவிதாவோ, காவல் நிலையம் முன்பாக உட்கார்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கவிதாவின் கணவர் மற்றும் அதிகாரிகள், நீண்ட நேரமாக பேசி சமாதானம் செய்து, கணவருடன் காரில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவ்வப்போது இதுபோல காவல் நிலையம், அல்லது பொது இடங்களில் பிரச்சனை செய்வதாக கூறினர். பள்ளிபாளையம் காவல் நிலையம் முன்பாக, பெண் தர்ணாவில் ஈடுபட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai marketing future