குமாரபாளையத்தில் ஏகாதசி விழாவிற்கு லட்டு தயாரிப்பு பணி தீவிரம்..!

குமாரபாளையத்தில் ஏகாதசி விழாவிற்கு லட்டு தயாரிப்பு பணி தீவிரம்..!
X

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி பக்தர்களுக்கு வழங்க  லட்டு தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 15 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாயொட்டி பக்தர்களுக்கு வழங்க 15 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவில் விட்டலபுரியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் டிச 23ல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிகழ்வு நடைபெற உள்ளது. பரமபத வாசல் திறப்பு விழா மற்றும் பக்தி பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 15,000 லட்டுக்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெருமாள் கோவில் பக்தர்கள் லட்டுகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தி பஜனை கோஷ்டிகளை வரவேற்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. பாண்டுரங்கர் கோவில் பஜனை குழுவினர் மற்றும் விட்டல் ரெகுமாயி பக்த சேவா பஜன் மண்டலி, குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


பெருமாளை வணங்கும் முறை

பெருமாள் கோவிலில் கோபுரம் இருப்பின் காலணிகளை கழற்றி விட்டு கோபுரத்தை தலை நிமிர்ந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தி கலசங்களை கண்டு வணங்க வேண்டும்.

பின்பு கோவிலுக்குள் சென்று கொடி மரம் அல்லது பலிபீடத்தின் அருகில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதன் பின்னர் உள்ளே சென்று ஸ்ரீ கருடன் சந்நிதியில் ஸ்ரீ கருடனை தரிசிக்க வேண்டும். அதையும் கடந்து ஜெய விஜய துவார பாலகர்களை வணங்கி பெருமாளை தரிசிக்க உள்ளே செல்ல வேண்டும்.

உள்ளே பெருமாளை தரிசிக்கும் நேரம் மௌனமாக பெருமாளின் திருவடி முதல் திருமுடி வரை கண்களால் கண்டு ரசித்து மனதுக்குள் தியானித்து பெருமாளுக்கு செய்யும் ஆரத்தியை கண்ணாரக்கண்டு வணங்க வேண்டும். கொடிமரம் தாண்டிய பின்னர் கைகளை தலைக்கு மேல் உயர்த்த கூடாது.

கைகளை மார்பிலிருந்து மூக்கு நுனி வரை மட்டுமே கொண்டு செல்லலாம். தீபாராதனை முடிந்த பின்னர் தீர்த்தம், சடாரி மற்றும் துளசி போன்ற பிரசாதங்கள் கொடுத்தால் வாங்கிக்கொண்டு சந்நிதியை நிதானமாக ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பின்னர் வெளியேறவேண்டும்.

ஏகாதசி தினத்தன்று காலை தொடங்கி மாலை வரை கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க உள்ளதாகவும், விழா நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆதிகேசவ கோவில் விழா கமிட்டியார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!