குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை  பணியாளர்கள் பற்றாக்குறை
X

குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சியில் தூய்மை பணியாளர் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை தவிப்புக்குள்ளாகி வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. வாரம் ஒரு வார்டு வீதம் மாஸ் கிளீன் செய்யப்படுகிறது. மலேரியா பணி, டெங்கு பணி உள்ளிட்ட பிரிவு பணியாளர்கள் போக நூற்றுக்கும் குறைவான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களை வைத்துக்கொண்டு நகர் முழுவதும் குப்பைகள் சேகரித்து, மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து, அவைகளை அந்தந்த இடங்களில் சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான நிலையில் இருந்து வருகிறது. பணிகள் தொய்வு ஏற்பட்டால் மேஸ்திரி, சுகாதார அலுவலர்கள் கண்டிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பணியாளர்கள் மன சங்கடத்திற்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இவைகளை தவிர்க்க கூடுதலாக தூய்மை பணியாளர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் கூட அனைத்து வார்டு கவுன்சிலர்களும் சுகாதாரத்துறை குறித்து புகார் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!