கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து  தொழிலாளி பலி
X
வட்டமலை பகுதியில், கட்டிடத்தின் மேலே இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

ஈரோடு மாவட்டம், ஊராட்சி கோட்டை பகுதியில் வசிப்பவர் கந்தசாமி, 70. கட்டுமான தொழிலாளி. இவர் குமாரபாளையம் வட்டமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணி செய்து கொண்டிருந்தார். இவருடன் பலரும் பணி செய்து கொண்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை 03:30 மணியளவில் திடீரென்று கட்டிடத்தின் மேலே இருந்து கீழே தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வழியில் இவர் உயிரிழந்ததாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!