குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயம்: போலீசார் விசாரணை
X

குமாரபாளையம் காவல் நிலையம்.

குமாரபாளையத்தில் கூலித் தொழிலாளி மாயமானதால் போலிசார் அவரை தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ராஜராஜன் நகரில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ், 50. விசைத்தறி பாவு ஓட்டும் வேலை செய்து வருகிறார். இவர் ஆகஸட் 1ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவர் வெளியில் பணம் கொடுத்து அது திரும்ப வராததால் மிகவும் மனமுடைந்து வந்ததாக கூறபடுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்களும் குடும்பத்தாரும் தேடி அலைந்தும் எங்கும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்ய, குமாரபாளையம் போலீசார் இவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!