குதிரைக்கு மேற்கூரை அமைக்க கோரி ஊராட்சியில் மனு

குதிரைக்கு மேற்கூரை அமைக்க   கோரி ஊராட்சியில் மனு
X
குமாரபாளையம் அருகே குதிரைக்கு மேற்கூரை அமைக்க கோரி ஊராட்சியில் மனு கொடுக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே குதிரைக்கு கொட்டகை அமைத்துத் தரக்கோரி ஊராட்சித்தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையத்தில் வசிக்கும் விஸ்வநாதன். இவர் தனது வளர்ப்புக்குதிரைகள் திறந்த வெளியில், மழை வெயிலில் இருந்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் வகையில் கொட்டகை அமைத்து தர வேண்டும் என மனு கொடுத்தார்.

இது பற்றி ஊராட்சி தலைவி புஷ்பா கூறியதாவது: ஆடு,மாடுகளுக்கு மேற்கூரையுடன் கூடிய கொட்டகை அமைக்க கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் இதுகுறித்து எவ்வித தகவலும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பு, நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் விண்ணப்பதாரர்களுக்கு கொட்டகை அமைத்து தரப்படும் என்று அவர் கூறினார்.

Tags

Next Story