குமாரபாளையத்தில் கும்பாபிஷேக விழா தீர்த்தகுட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு விநாயகர், முத்துமாரியம்மன், ஓங்காளியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் அருந்ததியர் தெரு விநாயகர், முத்துமாரியம்மன், ஓங்காளியம்மன், சின்ன மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று கணபதி பூஜையுடன் துவங்கியது.
காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க 500க்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்தக்குடங்கள் எடுத்து வந்தனர். நாளை காலை 06:30 மணிக்கு தீபம் ஏற்றுதல், புன்யாகவாசனம், காலை 09:00 கோபுர கலசங்கள் ஸ்தாபிதம் செய்தல், மாலை 06:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால யாக பூஜைகள் நடைபெறவுள்ளன.
பிப்.7 காலை 05:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 08:40 மணிக்கு யாகசாலையில் இருந்து திருக்கலசங்கள் புறப்படுதலும், 09:10 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெறவுள்ளன.
இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவை வட்டமலை வேலாயுதசுவாமி கோவில் அர்ச்சகர் சிவகுமார சிவம் உள்ளிட்ட குழுவினர் நடத்தவுள்ளனர். ஆலய நிர்மாணத்தை ஓலப்பாளையம் குணசேகர் வடிவமைத்திருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu