குமாரபாளையம் முருகன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் முருகன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்
X

குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் நகர் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி,   தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் ஜே.கே.கே. சுந்தரம் நகரில் உள்ள, ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற டிச. 8 ல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி நவ. 21ல் யாகசாலை கால்கோள் விழா நடைபெற்றது. டிசம்பர் 2ல் முளைப்பாரி இடுதல், டிச. 5ல் காவேரி ஆற்றில் இருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றும், நாளையும் காலை மற்றும் மாலை வேளைகளில், யாகசாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. டிச. 8ல் காலை 06:45 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதையடுத்து, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இந்த விழாவிற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags

Next Story