குமாரபாளையம் அருகே பொன் காளியம்மன் காேவில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையம் அருகே பொன் காளியம்மன் காேவில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் அருகே கும்பாபிஷேக விழா நடைபெற்ற பொன் காளியம்மன் கோயில்.

குமாரபாளையம் அருகே பொன் காளியம்மன், கன்னிமார், கருப்பனார் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே பொன் காளியம்மன், கன்னிமார், கருப்பனார் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் விநாயகர், கன்னிமார், கருப்பனார், மாரியம்மன், பெருமாள், தம்பிக்கலை அய்யன், கம்பத்து வீரப்பன் கோயில்கள் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. காவிரியில் தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டு, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. ஜூன் 13ல் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேட்டுவ கவுண்டர்கள் சங்க தலைவரும், புதிய திராவிட கழக நிறுவன தலைவருமான ராஜ் கவுண்டர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு விழாக்குழுவினர் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி