குமாரபாளையத்தில் மகா கணபதி, முனியப்பசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் மகா கணபதி, முனியப்பசுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் சேலம் சாலை முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் மகா கணபதி, முனியப்பசுவாமி கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

குமாரபாளையம் சேலம் சாலையில் மகா கணபதி, முனியப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி, கன்னிமார் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி அக். 22ல் பவானி கூடுதுறை முக்கூடலில் இறுதி தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டது. அக். 23ல் முதல் மற்றும் இரண்டாம் கட்ட யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

இன்று அதிகாலை 3 மணிக்கு மூன்றாம் கட்ட யாக சாலை பூஜைகள், அதிகாலை 4:15 மணிக்கு அனைத்து மூர்த்திகளுக்கும் சம காலத்தில் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சுவாமிநாத சிவாச்சாரியார், பவானி பழனியாண்டவர திருக்கோவில் அர்ச்சகர் சத்யோஜாதா வேத சங்கர சிவாச்சாரியார் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். சேலம், உத்தமசோழபுரம் விஜயகுமார் கோவில் சிற்பங்களை வடிவமைத்தார்.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil