குமாரபாளையம் அருகே கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே  கும்பாபிஷேக தீர்த்தக்குட  ஊர்வலம்
X

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே ராஜ கணபதி, சர்வ சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் ராஜகணபதி, சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது.

நேற்று காவிரி ஆற்றிலிருந்து மேள, தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மார்ச் 25,26ல் யாக சாலை பூஜைகள் நடைபெறவுள்ளன. மார்ச் 27ல் காலை 09:30 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

பொதுமக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!